தமிழக மீனவர் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 19 Mar 2025 01:16 PM
Last Updated : 19 Mar 2025 01:16 PM

தமிழக மீனவர் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

<?php // } ?>

புதுடெல்லி: இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். ஜனவரி 25-ம் தேதி முதல் 45 நாட்களில் பல்வேறு தாக்குதல்களை இலங்கை கடற்படை நடத்தி இருக்கிறது.

ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்காண ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிப்ரவரி 2-ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. பிப். 19-ம் தேதி, இலங்கை கடற்படை 42 இந்திய மீனவர்களை கைது செய்தது.

இலங்கை கடற்படையின் மனிதநேயமற்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது. நமது கடற்படை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது? நாங்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். தமிழக மீனவர்கள் என்ன அனாதைகளா?

நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்குச் சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களைச் சந்தித்தார். நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அதேபோல் சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? இன்றும்கூட ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனர்கள் இந்திய அரசிடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசி இருக்கிறார். வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். பலமுறை கடிதம் எழுதி இருக்கிறார். அவை அனைத்துமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டுவிட்டன .

இதுதான் இந்திய அரசு தமிழக மீனவர்களை, இந்திய குடிமக்களை நடத்தும் விதமா? இனிமேலாவது, நீங்கள் அங்கே செல்லாதீர்கள், அவர்களை இங்கே வரவழையுங்கள்.

இந்திய கடற்படை ஒருமுறையாவது ஒரு துப்பாக்கிச் சூட்டையாவது நடத்தி இருக்கிறதா? இவ்விஷயத்தில் இந்திய கடற்படையும், இலங்கை கடற்படையும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மொத்த தமிழகமும் இந்திய அரசால் கைவிடப்பட்டது போல் உணர்கிறது.” என தெரிவித்தார்.

வைகோவின் உரைக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவையின் மூத்த உறுப்பினர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவரது கவலையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், அவர் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை அவர் கோபத்தில் பேசி இருக்கிறார் என கருதுகிறேன்.

அந்த வார்த்தை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில், அது உண்மையல்ல. நமது மீனவர்களை துன்புறுத்துவதற்காக நமது கடற்படை, இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுமா?

இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2014ல் பிரதமர் மோடி பதவியேற்ற உடனேயே, இலங்கை அரசுடன் பேசினார். இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை உயிருடன் திருப்பி அனுப்ப வேண்டும் என கூறினார். நமது மீனவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பையும் நாம் வீணடிக்கவில்லை. நமது மீனவர்களுக்கு எப்போது எல்லாம் பிரச்சினை ஏற்பட்டுள்ளதோ அப்போதெல்லாம் நமது வெளியுறவுத்துறை அமைச்சகமும், பிரதமரும் உதவி இருக்கிறார்கள்.

வைகோவின் கவலைகள் அனைத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், அந்த ஒரு வார்த்தையை மட்டும் நீக்க வேண்டும் என்று அவைத் தலைவரை கோருகிறேன்.” என குறிப்பிட்டார்.

இதையடுத்து அவையை நடத்தி வந்த துணை தலைவர் ஹரிவன்ஷ், வைகோவின் அந்த குறிப்பிட்ட வார்த்தையை நீக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article