ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 01:27 PM
Last Updated : 25 Feb 2025 01:27 PM
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்: காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் அத்துமீறல் உள்பட பல்வேறு குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக காவல்துறை அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஸ் மோடக், சென்னை காவல் ஆணையர் சார்பில் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழக உளவு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐஜி செந்தில் வேலன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் விவகாரங்கள், கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- “பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக இரட்டை வேடம்” - ராமதாஸ் கண்டனம்
- “திமுக நிர்வாகத் திறமையின்மையை திசைதிருப்ப லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை” - இபிஎஸ் சாடல்
- அரசு உதவி மருத்துவர் பணியிடத்துக்கான தகுதி பட்டியலில் 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
- கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை