ARTICLE AD BOX
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேக்கும் ஏற்கனவே ஒரு வாய்க்கால் தகராறு இருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவை ஒரு கடிதம் எழுதி அந்த பதவியை விட்டு விராட் கோலி நீக்கிவிட்டார்.
இதனால் மனவேதனையுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய அனில் கும்ப்ளே, ஐபிஎல் பக்கம் ஒதுங்கி இருந்தார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விமர்சகராக அனில் கும்ப்ளே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

அப்போது பேசிய அனில் கும்ப்ளே "இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடர் பயிற்சியாளருக்கு மிகவும் முக்கியமான தொடராக கருதப்படுகிறது. ஏனென்றால் அவர் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணிக்கு பல சாதனைகளை செய்த வீரர்களுக்கு வயதாகி வருகிறது.
"2027 உலக கோப்பை விளையாடுவார்களா என்பதை பயிற்சியாளர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் சரி வர மாட்டார்கள் என்ற நினைத்தால் பயிற்சியாளர் கடினமான முடிவை எடுக்க வேண்டும். இந்தத் தொடர் எந்த சீனியர் வீரர் இருப்பார், எந்த சீனியர் வீரர் செல்வார் என்பதை முடிவு செய்யும் இதற்கான மாற்றத்தை பயிற்சியாளர் எடுக்க வேண்டும்".
ஏனென்றால் இனி அடுத்த ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெறுகிறது ஒரு உலகக்கோப்பை அணியை உருவாக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 அல்லது 25 போட்டிகளில் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். அப்போதுதான் வீரர்கள் போட்டியின் சூழ்நிலையை தெரிந்து கொண்டு விளையாடுவார்கள்.
மேலும் நாம் எந்த வீரர்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரியவரும் எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் அடுத்த உலக கோப்பை தொடருக்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். சீனியர் வீரர்களுக்கு தற்போது வயதாகிவிட்டது.அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடிப்பார்களா இல்லை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்பது குறித்து நாம் யோசனை செய்ய வேண்டும்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் கம்பீர் விடை கண்டுபிடிப்பார் என நம்புகிறேன். பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போது தொடங்கி விடுங்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கி வாருங்கள். இதன் மூலம் பேட்டிங் ஆர்டர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் விடை கிடைக்கும் என அனில் கும்ப்ளே கூறியுள்ளார். கும்ப்ளேவின் இந்த கருத்து ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் ஆப்பு வைக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.