சென்னை | மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 7 பேர் கைது

1 day ago
ARTICLE AD BOX

Published : 13 Mar 2025 06:09 AM
Last Updated : 13 Mar 2025 06:09 AM

சென்னை | மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 7 பேர் கைது

<?php // } ?>

சென்னை: ​மாதவரத்​தில் மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் வைத்​திருந்த 7 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மாதவரம் பகு​தி​யில் போதைப் பொருள் நடமாட்​டம் இருப்​ப​தாக சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறிவு பிரிவு போலீ​ஸாருக்கு நேற்று முன்​தினம் ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, மாதவரம் பேருந்து நிலை​யம் டிரக் டெர்​மினல் அருகே போலீ​ஸார் தீவிர கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு வந்த 7 பேரிடம், சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இதில், மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருளை கைமாற்​று​வதற்​காக அவர்​கள் வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, பள்​ளிக்​கரணை ராகுல் (24), முத்​து​ராஜன்​(29), வேளச்​சேரி சதீஷ்கு​மார் (32), தனி​யார் கார் நிறு​வனத்​தில் வேலை செய்​யும் ஆவடி அஜய் (26), கால்சென்​டரில் பணி​யாற்​றும் பாடி நிஸ்​டல் (27), மண்​ணடி சமீம் பிர்​தவுஸ் (31), பல்​லா​வரம் புருஷோத்​தமன் (23) ஆகிய 7 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து 7 கிராம் மெத்​தம் ​பெட்​டமைன், 80 கிராம் கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டன.

1,800 போதை மாத்​திரைகள்: மதுர​வாயலில் போதை மாத்​திரை விற்ற 2 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து 1,800 போதை மாத்​திரைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சென்னை மதுர​வாயல் பகு​தி​யில் போதை மாத்​திரைகள் விற்​கப்​படு​வ​தாக போலீ​ஸாருக்கு நேற்று முன்​தினம் ரகசிய தகவல் கிடைத்​தது.

இதன்​பேரில், மதுர​வாயல் பாலம் அருகே தனிப்​படை போலீ​ஸார் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர். அங்கு சந்​தேகப்​படும் வகை​யில் நின்​றிருந்த 2 பேரை பிடித்து விசா​ரணை நடத்​தினர். அவர்​களது பையை சோதனை செய்​த​தில், 1,800 போதை மாத்​திரைகள், 10 சிரிஞ்​சுகள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டன. இதையடுத்​து, நெசப்​பாக்​கத்தை சேர்ந்த சஞ்​சய் (24), கார்த்​தி​கேயன் (24) ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார்​ கைது செய்​து, சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article