இந்தியாவில் குறைந்த செலவில் சுற்றி பார்த்து விட்டு வருவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அதிகம் செலவு இல்லாமல் இந்தியாவின் புதிய நகரங்களுக்கு சென்று வர விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் பர்சை பதம் பார்க்காமல் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய 10 நகரங்கள் இவைகள் தான். ரூ.10,000 செலவிற்குள்ளாகவே பயண செலவு, சாப்பாடு, தங்குமிடம் என சகலத்தையும் முடித்து விடலாம். அதோடு அதிகமான இடங்களை சுற்றி பார்த்து விட்டும் வந்து விடலாம்.

வாரணாசி
பண்டைய நகரமான வாரணாசியில் கங்கா ஆரத்தி மற்றும் படகு சவாரி, அமைதியான மலைப்பாதை நடைப்பயணங்கள் போன்றவற்றை குறைந்த செலவில் காணலாம். புனித நகரங்களில் ஒன்றாக இருக்கும் காசி எனப்படும் வாரணாசியில் சென்று பார்ப்பதற்கு ஏராளமான கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பாரம்பரிய சின்னங்கள் ஏராளமாக உள்ளன.
மெக்லியோட் கன்ச்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெக்லியோட் கன்ச்சின் பிரமிக்க வைக்கும் இயற்கை பாதைகளும், அழகான புத்த மத கோயில்களையும் , அமைதியான பள்ளத்தாக்குகளையும் குறைந்த செலவில் கண்டு களிக்க ஏற்ற இடமாகும். மிக குறுகிய தூரத்தில் அல்லது ஒரே இடத்தில் பல அம்சங்களை அனுபவிக்க முடியும் என்பதால் அதிக செலவும் வைக்காது.
ஹம்பி
கர்நாடகாவில் உள்ள கம்பியில், விஜயநகர பேரரசின் பாரம்பரிய சின்னங்களையும் மலை கோயில்களையும் ரசிக்கலாம். இந்தியா மற்றும் கர்நாடகாவின் மிக பிரபலமான நகரங்களில் ஒன்றாகும், சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. ராமாயணத்தில் கிஷ்கிந்தை என குறிப்பிடப்படும் நகரம் இது தான். துங்கபத்திரை நதி, பழமையான கோயில்கள் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நகரம்.
புஷ்கர்
புஷ்கரில் உள்ள துடிப்பான கலாச்சாரம் புனித ஏரி மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரு உணவுகள் போன்றவற்றை அனுபவிக்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய நகரம் தான். ஆனாலும் புனித நகரமாக கருதப்படும் இடம் இது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும் புனித பயணம் மேற்கொள்ளும் நகரமாகும். இங்குள்ள பிரம்மா கோவில், ஒட்டக திருவிழா ஆகியவை மிகவும் பிரபலமானவை.
ரிஷிகேஷ்
ரிஷிகேஷின் இலவச யோகா பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம். ரிஷிகேஷ் அழகிய காட்சிகளில் குறைந்த விலையில் சாகச விளையாட்டுகளையும் அனுபவிக்கலாம். ஆன்மிகம், அமைதி, கலாச்சாரம் தேடுபவர்களுக்கு ஏற்ற நகரம். போக்குவரத்து நெரிசல் மற்றும் மதுபானங்கள் இல்லாத புனிதமான நகரம். பாவங்கள் போக்கும் தலமாக இருக்கும் இங்கிருந்து ஹரித்வாருக்கு எளிதில் சென்று விடலாம்.
கசோல்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கசோலில் பார்வதி பள்ளத்தாக்கு வழியாக பயணம் செய்வது ஒரு புதிய அனுபவத்தை தரும். மேலும் கசோலில் குறைந்த விலை உணவுகளையும் ருசி பார்க்கலாம். இது குக்கிராமம் தான் என்றாலும் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மிக அமைதியான இடமாகும். இந்தியாவின் அம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்படும் இடமாகும். பலரும் அறியாத மிக அற்புதமான சுற்றுலா தலம் இதுவாகும்.
புதுச்சேரி
புதுச்சேரி வினோதமான கஃபேக்கள், அழகான கடற்கரைகள் மட்டும் மலிவு விலை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கலாம். இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர அதிகம் செலவு செய்யவே வேண்டாம். ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்தாலே ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு வந்து விடலாம். இங்கு குறைந்த விலை முதல் காஸ்ட்லி வரையிலான அனைத்து ரகத்தினருக்கும் ஏற்ற உணவுகள், தங்கும் இடங்கள் என பலவும் கிடைக்கும்.
டார்ஜிலிங்
குறைந்த பட்ஜெட்டில் டார்ஜிலிங் தேயிலை தோட்டங்கள், பொம்மை ரயில் மற்றும் பிரமிக்க வைக்கும் இமயமலை காட்சிகளை காணலாம். கோடை காலத்தில் டிரிப் சென்று வர ஏற்ற இடமாகும். கலாச்சாரம், இயற்கை அழகு ஆகியவை நிறைந்த நகரம். இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் நகரம் என்பதால் இதன் குளுமையான சூழல் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
கோகர்ணா
கோகர்ணாவின் அமைதியான கடற்கரைகள், கோயில்கள் மற்றும் புதிய கடல் உணவுகளை அதிக செலவு இல்லாமல் உண்டு மகிழலாம். கர்நாடகாவின் மிக முக்கியமான கோயில் நகரமாகும். ஒரு நாள் டிரிப் சென்று வருவதற்கு ஏற்ற இடம். விடுமுறையை குறைந்த செலவில் நிறைவாக கழிக்க ஏற்ற இடம்.
ஆலப்புழா
பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஆலப்புழாவின் அழகிய உப்பங்கழிகள் மற்றும் சுவையான உள்ளூர் உணவு வகைகளை அனுபவித்து மகிழலாம். இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் ஆலப்புழாவில் படகு வீடு, நீர் வழி பயணம், படகு போட்டி, கடற்கரைகள், கடல் பொருட்கள் விற்பனை ஆகியவை மிகவும் பிரபலமானவையாகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet