காதல் பின்னணியில் காமெடி த்ரில்லர்!

5 hours ago
ARTICLE AD BOX

Published : 03 Feb 2025 09:55 AM
Last Updated : 03 Feb 2025 09:55 AM

காதல் பின்னணியில் காமெடி த்ரில்லர்!

<?php // } ?>

‘ராவணக் கோட்​டம்’ உட்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் கணேஷ் சரவணன். அஜித்​கு​மாரின் ‘விடா​முயற்சி’ படத்​தில் நெகட்​டிவ் கதாபாத்​திரத்​தில் நடித்​துள்ள இவர், இப்போது கதாநாயகனாக அறிமுக​மாகிறார். இந்தப் படத்​தில் பிரக்யா, ஆயிஷா, புகழ் என பலர் நடிக்​கின்​றனர்.

மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பி, ரமேஷ் முக்கிய வேடத்​தில் நடிக்​கிறார். அறிமுக இயக்​குநர் ஜாபர் இயக்குகிறார். சத்யா இசை அமைக்​கிறார். சதீஷ்கு​மார் ஒளிப்​ப​திவாளராக அறிமுக​மாகும் இப்படத்தை ஆஃப்​ரின்ச் புரொடக்​‌ஷ்ன்ஸ் சார்பாக ஆஃப்​ரின்ச் தயாரிக்​கிறார்.

படம் பற்றி ஜாபர் கூறும்​போது, “நான், மிஸ்டர் லோக்​கல், மாட்​டிக்​கிட்​டியா பங்கு ஆகிய வெப் தொடர்​களை​யும் தூர்​தர்​ஷனில் வெளியான, நானே வருவேன் என்ற சீரியலை​யும் இயக்கி இருக்​கிறேன். இப்போது சினி​மா​வில் அறிமுக​மாகிறேன். இது, காதல் பின்னணி​யில் உருவாகும் காமெடி த்ரில்லர் படம். கல்லூரி​யில் காதலித்​தவர்கள் சூழ்​நிலை​யால் பிரிந்து வெவ்​வேறு வாழ்க்கை வாழ்​கிறார்​கள். ஒரு கட்டத்​தில் மீண்​டும் பேசிக்​கொள்​ளும் வாய்ப்பு கிடைக்​கிறது.

மீண்​டும் சந்திக்க நினைக்​கும் அவர்கள் ஒரு குறிப்​பிட்ட இடத்​துக்​குச் செல்​கிறார்​கள். அங்கு என்ன நடக்​கிறது என்​பது​தான் கதை. இந்த மாத இறு​தியில் படப்​பிடிப்பு தொடங்க இருக்​கிறது” என்​றார்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article