ARTICLE AD BOX
Published : 16 Mar 2025 12:36 PM
Last Updated : 16 Mar 2025 12:36 PM
காதல் கதைக்கு எந்த நாட்டிலும் வரவேற்பு உண்டு: கே.பாக்யராஜ்

விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'ட்ராமா'. தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார். டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். உமா மகேஸ்வரி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழாவில் ராதா ரவி, கே.பாக்யராஜ், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயதாரணி என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கே.பாக்யராஜ் பேசும்போது, “ட்ராமா என்றால் ‘பாதிப்பு’ எனச் சொன்னார்கள். சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. கதை விவாதத்தின்போது, உதவியாளர்களிடம் உன் மனதுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதை அலசினால் நல்ல கதை கிடைக்கும் எனச் சொல்வேன். எந்த நாட்டிலும் எந்த மக்களிடத்திலும் வரவேற்பைப் பெறும் ஒரே ஸ்டோரி, லவ் ஸ்டோரிதான். இன்றைய இளைஞர்கள் காதலிக்கிறார்களோ இல்லையோ, காதல் பற்றி கவிதை எழுதி விடுவார்கள். அதனால் முதலில் அறிமுகமாகிறவர்கள் காதல் கதையை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக எழுதி இயக்கி விடுவார்கள். ஆனால் தம்பிதுரை அப்படி அல்லாமல் இதில் 3 கதை களங்களை எடுத்திருக்கிறார். இதற்காகவே அவரை பாராட்டலாம்” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ‘திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்’ - தவெக தலைவர் விஜய் விமர்சனம்
- குஷ்பு தயாரிக்கும் ஃபேன்டஸி காமெடி படம்!
- கர்ணன்: நல்லவனா, கெட்டவனா? | தொன்மம் தொட்ட கதைகள் - 28
- எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ - 2025 மாபெரும் பேச்சுப் போட்டி சேலம் மண்டலப் போட்டிகள் வரும் ஞாயிறன்று (மார்ச். 23) நடைபெறுகிறது