வரலாறு, கலாச்சாரம், மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றால் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது இந்தியா. இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என சொல்ல துவங்கினால், பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த அளவிற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பல சிறப்புகள், பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. ஆனால் வெளிநாட்டினரும் சரி, இந்தியாவில் இருப்பவர்களும் சரி, வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது அவசியம் சென்று பார்க்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு இந்தியாவில் பிரம்மிக்க வைக்கும் மிக அற்புதமான டாப் 10 சுற்றுலா தலங்கள் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

1. தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் நினைவுச் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது அன்பு மனைவி மும்தாஜிற்காக கட்டிய நினைவுச் சின்னம். வெள்ளை பளிச்சென்ற மார்பிள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலைநயம் மிக்க கட்டிடம், அழகான தோட்டம் மற்றும் நதி ஓரத்திலுள்ள அமைப்பால் இது உலகளவில் பிரமானதாக திகழ்கிறது. இதை ஏன் உலக அதிசயம் ஆக்கினார் என்பது நேரில் சென்று பார்த்தவர்களால் மட்டும் தான் சொல்ல முடியும்.

2. ஜெய்ப்பூர்
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர், அரண்மனைகள், கோட்டைகள், மற்றும் மாளிகைகளுக்கு புகழ்பெற்றது. ஆம்பர் கோட்டை, ஹவா மஹால் மற்றும் சிட்டி பேலஸ் ஆகியவை வரலாற்றுச் சுவடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய இடங்கள். ராஜஸ்தானிய கட்டிடக் கலையின் சிறப்புகள் விளக்கும் இந்த அரண்மனை நகரத்திற்குள் சென்றாலே ராஜா காலத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டு விடும்.
3. வாரணாசி
நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாக விளங்கும் வாரணாசியில், கங்கை ஆர்த்தி, விஸ்வநாதர் கோயில் தரிசனம் மற்றும் அரண்மனை என கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள ஆன்மீகத் தலமாகும். வாரணாசி மலைத் தொடர், சன் செட் ஸ்பாட் ஆன்மிக வெள்ளத்தை நமக்கு பாய்ச்சும் ஒரு அற்புத நகரமாகும்.

4. கேரளா
கேரளாவின் பசுமையான நிலங்கள் மற்றும் ஹவுஸ்போட் சவாரி போன்ற புகழ் பெற்றவை. கோவில்கள், கடற்கரைகள், நீர் வீழ்ச்சிகள், மலைகள் என எந்த மாதிரியான உணர்வை வெளிப்படுத்த விரும்பினாலும் அதற்கு ஏற்ற இடமாக கேரளா நிச்சயம் இருக்கும். இங்குள்ள ஒவ்வொன்றும் வித்தியாசம், பிரம்மாண்டம், அழகும் தான்.
5. ஜம்மு -காஷ்மீர் (லடாக்):
இந்தியாவின் 'உயரமான பன்முக அழகு' கொண்ட மாநிலமாக ஜம்மு - காஷ்மீர் விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, மற்றும் மகாத்மா காந்தி சாலை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவங்களை வழங்குகின்றன. மோனஸ்டரிகள், சாண்டு ட்யூன்கள், மற்றும் அற்புதமான மலைக் காட்சிகள் இந்த இடத்தின் சிறப்பம்சங்களாகும்.
6. கோவா:
கோவா கடற்கரைச் சுற்றுலாவுக்கு இந்தியாவில் முதன்மையான இடமாக விளங்குகிறது. இங்குள்ள பாகா கடற்கரை, அன்ஜுனா கடற்கரை மற்றும் காலங்குட் கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்கின்றன. கடற்கரை விருந்துகள், வாட்டர் ஸ்போர்ட்ஸ், மற்றும் போர்த்துகீசிய கலைக் கோயில்கள் கோவாவின் சிறப்பம்சங்களாகும்.

7. ரன் ஆப் கட்ச்:
குஜராத்தில் அமைந்துள்ள ரன் ஆப் கட்ச் (Rann of Kutch) உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனங்களில் ஒன்றாகும். முழுமையாக வெள்ளை மணலால் சூழப்பட்ட இந்த இடம், முழு நிலவின் நேரத்தில் மெய்சிலிர்க்கும் அழகை வெளிப்படுத்துகிறது. திருவிழா, பாரம்பரிய கலை, கைவினை பொருட்கள், இசை மற்றும் நடனங்களின் ஒட்டகத்தின் மீது சவாரி மற்றும் பாலைவன முகாம்கள் போன்றவை இந்த இடத்தின் சிறப்பம்சங்களாகும்.
8. மைசூரு:
கர்நாடகாவின் மைசூரு, இந்தியாவின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நகரங்களில் ஒன்றாகும். பிரபலமான மைசூரு அரண்மனை, அழகிய பூங்கா, மற்றும் தசரா திருவிழா இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்கள். சந்தன திரவியம், கைவினை பொருட்கள் மற்றும் பாரம்பரிய நகைகள் மைசூரின் சிறப்பு அடையாளங்கள்.
9. டார்ஜிலிங்:
மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், அதன் தேயிலை தோட்டங்கள், அழகிய மலையழகு, மற்றும் பிரபலமான டாய்ட்ரெயின் ஆகியவற்றிற்காக பிரசித்தமானது. கஞ்சன்ஜங்கா மலைக்காட்சியின் நிழலில் அமைந்துள்ள இந்த நகரம், மனதை மகிழ்விக்கும் இயற்கை அனுபவத்தையும், குளிர்ந்த வானிலையையும் வழங்குகிறது. டைகர் ஹில், பதாஸியா லூப், மற்றும் ஜூல் மானஸ்டரி போன்றவை முக்கியமான சுற்றுலா இடங்களாகும்.
10. அந்தமான் - நீக்கோபார் தீவுகள்:
அந்தமான் - நீக்கோபார் தீவுகள், பவளப்பாறைகள், நீலநிறக்கடல், வெள்ளை மணற்கரைகள், மற்றும் அற்புதமான பன்முக வளிமண்டலம் கொண்ட கடலியல் சொர்க்கமாகும். இங்கு ஸ்கூபா டைவிங், மிருக காட்சிகள், மற்றும் செல்லுலார் ஜெயில் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.
இந்த 10 சுற்றுலா தலங்கள், இந்தியாவின் பலவிதமான பண்பாடு, வரலாறு மற்றும் இயற்கை அழகை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet