ஏப்ரல் 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா, 5000mAh பேட்டரி.. வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?

8 hours ago
ARTICLE AD BOX

ஏப்ரல் 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா, 5000mAh பேட்டரி.. வருகிறது புது Motorola போன்.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Wednesday, March 19, 2025, 12:13 [IST]

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இதுதவிர இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 60 Fusion Specifications): 6.7 இன்ச் குவாட் கர்வ்ட் அமோலெட் (quad-curved AMOLED)டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் பல அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புது Motorola போன்..

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (MediaTek Dimensity 7400 chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு அட்ரினோ (Adreno) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

Take a Poll

அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா
ஸ்மார்ட்போன்.

50எம்பி சோனி எல்ஒய்டி700 (Sony LYT700) பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

ஏப்ரல் 9 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புது Motorola போன்..

5500mAh பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Motorola Edge 60 Fusion India launch Date leaked: check all details here
Read Entire Article