அயோத்தி, இந்தியாவின் ஆன்மிகப் பண்பாட்டின் அடையாளமாக திகழும் ஒரு புனித நகரம். இது பகவான் ஸ்ரீராமரின் பிறப்பிடம் மட்டுமல்ல, ஆன்மிகமும், வரலாறும் சமமாக விளங்கும் ஒரு நகரமாகும். இந்த நகரம் யாத்திரிகர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் இயற்கை பிரியர்களுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. அயோத்தியின் ஒவ்வொரு இடமும் மனதிற்கு அமைதியையும், ஆன்மிகத்தையும் அளிக்கக் கூடியவை. இங்கு செலவே இல்லாமல் இலவசமாக எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்க்க அனுமதி வழங்குகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

1. ராம ஜன்மபூமி
பகவான் ஸ்ரீராமர் பிறந்த புனித இடம் என பக்தர்களால் மிகவும் போற்றப்படும் தலமாகும். இக்கோயில் கும்பாபிக்ஷேகத்திற்கு பிறகு ராம ஜென்ம பூமி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.
2. சரயு ஆறு
அயோத்தியில் உள்ள இந்த புனித ஆறு ராமாயணத்தோடு நேரடியாக தொடர்புடையது. இங்கு பக்தர்கள் புனித நீராடி சடங்குகள் மற்றும் பிரார்த்தனை செய்தும், மாலை நேரத்தில் இங்கு நடைபெறும் ஆரத்தி விழாவை கண்டுகளிக்கிறார்கள்.

3. ஹனுமான் கர்ஹி
அயோத்தியில் அமைந்துள்ள மிக முக்கிய ஹனுமான் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த மலைக்கோவில் ஹனுமானை தரிசித்து விட்டு பின்னர் நகரப்புற அழகை கண்டு ரசிக்கலாம்.
4. திரேத கே தாக்கூர்
இந்த கோயில் 300 ஆண்டுகளுக்கு முன் குல்லுவால் என்னும் ஆட்சியாளரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களின் படி, இந்தக் கோயில் பகவான் ஸ்ரீராமரின் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இங்கு பகவான் ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் நடத்தியதாகவும் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் பழமையான மிக அழகிய சிலைகள் உள்ளன

5. குப்தர் காட்
பகவான் ஸ்ரீராமர் இங்கு மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அமைதியான மற்றும் ஆன்மிக இடமாக விளங்குகிறது.
6. தசரத மாளிகை
பகவான் ஸ்ரீராமரின் தந்தை ராஜா தசரதரின் அரண்மனை, இங்கு ராமர் தனது குழந்தை பருவத்தை கழித்த இடமாகும். இந்த அரண்மனையில் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோருக்கான சன்னதி உள்ளது. இது மாமேதி கால கட்டிடக் கலையின் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
7. ராம்கி பயடி
இது சரயு நதியில் கட்டப்பட்ட தொடர்ச்சியான படிகளாகும். இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புனித நீராடியும், காலை மற்றும் மாலையில் நடைபெறும் ஆரத்தி விழாவை கண்டு ரசித்திடும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு புனித இடம்.
8. நாகேஸ்வரநாதர் கோயில்
இது ராம்கி பையடியில் கட்டப்பட்டுள்ள ஒரு பழமையான சிவன் கோயில். நம்பிக்கையின்படி, இக்கோயிலை ஸ்ரீராமரின் மகன் குஸன் கட்டியதாக கருதப்படுகிறது. புராணங்களின்படி, ஸ்ரீராமரின் மகன் குஸன், சரயு நதியில் குளிக்கும் போது தவறவிட்ட கைஆயுதத்தை கண்டுபிடித்து நாக கன்னியாவிற்கு கட்டப்பட்ட கோயிலாகும்.

9. கனக மாளிகை
இது துளசி நகரில் ராமர் கோயிலுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது. சீதாதேவிக்கு ஸ்ரீராமரால் பரிசாக வழங்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு அழகிய அரண்மனை போன்ற கோயிலாகும்.
10. குலாப் பாரி
அயோத்தியில் உள்ள குலாப் பாரி ஒரு ரோஜா தோட்டம் மற்றும் கல்லறை ஆகும். இந்த இடத்தில் உள்ள அழகான தோட்டங்கள், குளங்கள், மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் போன்றவை முகலாயக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet