இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் மொபைல் போன், இன்டர்நெட் ஆகியவை இல்லாமல் சிறிது நேரம் கூட இருக்க முடியாத என்ற நிலை தான் உள்ளது. ஆனால் இவற்றின் அதிக நேரம் பயன்பாடு காரணமாக அனைவருக்கும் இது போன்ற தொல்லையான விஷயங்கள் இல்லாத இடத்திற்கு போய் நிம்மதியாக இருந்து விட்டு வரலாம் என பலருக்கும் எண்ணம் மனதில் வந்து போகும்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் இது சாத்தியமாக என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு போனால் மொபைல் கால்கள், இன்ட்நெட் சேவைகள் இவற்றின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இயற்கையோடு இணைந்து ஜாலியாக இருந்து விட்டு வரலாம். உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் இடங்களின் பட்டியல் இதோ...
1. கீர்கங்கா - இமாச்சலப் பிரதேசம்:
உயர்ந்த மலைகளின் மடியில் அமைந்துள்ள கீர்கங்கா, இமாச்சலப் பிரதேசத்தின் மிக அழகான மற்றும் அமைதியான பயணத்திற்கான இடங்களில் ஒன்றாகும். இங்குள்ள பார்வதி பள்ளத்தாக்கு, பசுமையான இயற்கை அழகுடன் காணப்படும் அமைதியான சூழல் மற்றும் வெந்நீரூற்றுகள் மிகவும் பிரபலமாகும். இங்கு எந்தவிதமான தொலைபேசி நெட்வொர்க்கும் கிடைக்காது என்பதால், இயற்கையை முழுமையாக அனுபவிக்கலாம்.
2. ஐஸ் கிங்டம் - ஜான்ஸ்கர், காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 'ஐஸ் கிங்டம்' (Ice Kingdom) என அழைக்கப்படும் இந்த பகுதி இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வெப்பநிலை குறைந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. குளிர்காலத்தில் ஒரு வெளிர் நீல நிற ஐஸ்லேண்ட் போலவே மாறிவிடும் மலைகளுக்கு இடையே மறைந்து கிடக்கும் பனிக்குகைகள், இயற்கையாக உருவான பனி நீர்வீழ்ச்சிகள் என ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை அளிக்கும் மிக அரிய இடமாகும்.
3.சிட்குல் - இமாச்சலப் பிரதேசம்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னர் மாவட்டத்தில் உள்ள சிட்குல் கிராமம், இந்தியாவின் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள கடைசி கிராமம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இங்கு பனி மூடிய இமயமலைகள், பரப்பிக்கிடக்கும் பசுமை மற்றும் அமைதியான பஸ்பா ஆறு , மலைக்கிராம ஹோம்ஸ்டே, கேம்பிங், மகாபுத்த கோயில் மற்றும் சங்க்லா பள்ளத்தாக்கில் சிறிய ட்ரெக்கிங் என அமைதியான இயற்கையை அனுபவிக்கலாம்.

4. லுங்க்தூங் - தூப் தரா, சிக்கிம்
கிழக்கு சிக்கிம் பகுதியில் உள்ள இந்த, லுங்க்தூங்-தூப் தரா என்ற இரட்டை கிராமங்கள் "மேகங்களை தொடும் ஒரு கனவு நிலம்" என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இங்கு பிரமாண்டமான மலைகள், பனி மூடிய பள்ளத்தாக்குகள், பழமையான சில்க் ரூட் மற்றும் அரிய வனவிலங்குகள், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா இங்கிருந்து பிரகாசமாக தெரியும். மேலும் அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது, பனிமலைகள் பொன் நிறமாக மாறுவதை கண்டு ரசிக்கலாம்.
5.ஸ்வர்கரோஹினி - உத்தரகாண்ட் :
உத்தரகாண்டில் உள்ள கர்குவால் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. ஸ்வர்கரோஹினி, மகாபாரதத்தின் முக்கியமான ஒரு இடம். இதன் படி, பாண்டவர்கள் சொர்க்கம் அடைய இந்த பனிமலைக்குப் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. இங்கு பனியில் மூடப்பட்ட சிகரங்கள், மேகங்கள் சுழ்ந்து காணப்படும். பள்ளத்தாக்குகள், வஸுதாரா நீர்வீழ்ச்சி , சதோபந்த் தால் என்னும் மலைச்சிகரம் மற்றும் சூரிய உதயத்திலும், அஸ்த்தமனத்திலும் , மலைகள் பொன் நிறத்தில் மாறுவதை கண்டு ரசிக்கலாம்.
6. பூக்களின் பள்ளத்தாக்கு - உத்தரகாண்ட் :
உத்தரகாண்டின் கர்குவால் இமயலை பகுதியில் அமைந்துள்ள "இயற்கையின் வண்ணமயமான கனவு" என்று கூறப்படக்கூடிய பூக்களின் பள்ளத்தாக்கு , யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இப்பள்ளதாக்கு வண்ணமயமான மலர்கள், பசுமையான மலைப்பாங்கு, பனியால் சூழப்பட்ட மலைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் இந்த இடத்தை உலகளவில் பிரபலமாக்கி உள்ளது.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet