ARTICLE AD BOX
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான சிவப்பு அவல் உப்புமா.. எப்படி செய்யணும் தெரியுமா?
Red Aval Upma Recipe In Tamil: தற்போது உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக பலரும் டயட்டில் இருக்கின்றனர். இப்படி டயட்டில் இருக்கும் பலர் தங்களின் காலை உணவாக பிரட், சாலட் என்று தான் எடுக்கிறார்கள். ஆனால் இந்த வகை காலை உணவுகள் ஒருவரது வயிற்று பசியை எப்படி அடக்கும்? நிச்சயம் முடியாது தானே.
சொல்லப்போனால் இவற்றை உட்கொண்டால் பசி இன்னும் தான் அதிகரிக்கும். ஆனால் காலையில் நம் முன்னோர்கள் உட்கொண்டு வந்த சிறுதானியங்கள் மற்றும் பிற தானிய வகைகளை உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைய உதவுவதோடு, வயிற்று பசியும் அடங்கும்.

அதுவும் சிவப்பு அரிசி அவலைக் கொண்டு காலையில் உப்புமா செய்தால், உப்புமா பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இது சுவையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு சிவப்பு அரிசி அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்பு அரிசி அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு அரிசி அவல் - 1 1/2 கப் அல்லது 200 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் சிவப்பு அரிசி அவலை நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்து 7-8 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, அத்துடன் பச்சை
மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் முந்திரியை சேர்த்து
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட்டை சேர்த்து, சிறிது
உப்பு தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள அவலை வடிகட்டிவிட்டு சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி, பாதி எலுமிச்சை சாற்றினை
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சிவப்பு அவல் உப்புமா தயார்.