உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை: ட்ரம்ப் கடும் விமர்சனம்

6 hours ago
ARTICLE AD BOX

Published : 04 Mar 2025 09:57 AM
Last Updated : 04 Mar 2025 09:57 AM

உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை: ட்ரம்ப் கடும் விமர்சனம்

<?php // } ?>

உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதிருந்தே தான் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டிருக்காது என்று ட்ரம்ப் கூறிவந்தார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்தார்.

அதன்படி, அதிபரான நாள் முதல் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முயன்று வருகிறார். ஆனால், அண்மையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு சுமுகமாக முடியவில்லை. ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றபட்டார். அதன்பின்னர் அடுத்த அதிரடி நகர்வாக உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அனைத்து ராணுவ உதவியையும் ட்ரம்ப் விலக்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் விவகாரத்தை முந்தைய பைடன் அரசு மோசமாகக் கையாண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் காலத்தில்தான் ரஷ்யா ஜார்ஜியாவைக் கைப்பற்றியது. அதன்பின்னர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் கீழ் ரஷ்யா தனது ராணுவ, கடற்படை பலத்தை விஸ்தரித்துக் கொண்டது. நீர்மூழ்கித் தளம், ராணுவத் தளம் என அதிகார எல்லையை விஸ்தரித்தது. ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ரஷ்யா உக்ரைனை முழுவதுமாகவே ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்துள்ளது. இடையில் நான் அதிபராக இருந்தபோது மட்டுமே ரஷ்யா துக்கத்தைத் தவிர வேறதையும் அமெரிக்காவிடமிருந்து பெற முடியவில்லை.

அதனால், இப்போது உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் நான் தலையிட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். இப்போது ஒரு முடிவை எட்ட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் அதிகமானோர் அங்கே கொல்லப்படுவார்கள். அவர்கள் கொலையாக வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இங்கே ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், முந்தைய அதிபர்கள் ரஷ்யாவுக்கு நிறைய கொடுத்தனர், எல்லாமும் கொடுத்தனர்.

இந்த வேளையில் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன், ரஷ்யா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறாக சம்பந்தப்பட்ட எல்லோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது முடிவும் விரைவில் எட்டப்பட்டும். ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. உக்ரைன் மக்களும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் தான் மிகமிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படக் கூடாது என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் இங்கே இந்த பேச்சுவார்த்தையில் பங்குவகிக்கும் இடத்தில் இருக்க மாட்டார்கள். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப்பின் பேச்சு ஜெலன்ஸ்கிக்கான மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஜெலன்ஸ்கி மோசடி செய்தே அதிபராக நீடிப்பதாக ட்ரம்ப் பலமுறை விமர்சித்துவிட்டார். ஒருபடி மேலே சென்று ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்றும்கூட ட்ரம்ப் விமர்சித்துவிட்டார். இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article