ARTICLE AD BOX
Published : 19 Mar 2025 09:02 AM
Last Updated : 19 Mar 2025 09:02 AM
‘இனி அப்படியான தாக்குதல்கள் நடக்காது’ - ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்குப் பின் புதின் இசைவு

வாஷிங்டன் / மாஸ்கோ: 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ட்ரம்ப்பிடம் உறுதியளித்துள்ளார்.
மூன்றாடுகளாக நீடித்துவரும் உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று புதின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், நேற்று புதின் - ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் உக்ரைனைப் போல் ரஷ்யாவும் 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், புதின் அதனை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக 30 நாட்களுக்கு உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டும் நடக்காது என்று கூறியுள்ளார்.
“30 நாட்கள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டால் உக்ரைன் அந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்தி கூடுதல் படைகளை, ஆயுதங்களைக் குவிக்கும். தன்னை ராணுவ ரீதியாக பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும். எங்களை போர் நிறுத்தத்துக்கு அழுத்துவதைக் காட்டிலும் உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கிவரும் ராணுவ தளவாட உதவிகள், உளவுத் தகவல்களை நிறுத்தினாலே போர் முடிவுக்கு வரும்.” என்று புதின் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. பயனுள்ளதாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- பாகிஸ்தானில் மோசடி கால் சென்ட்டரில் புகுந்து கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த மக்கள்
- 9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
- ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்!
- காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ தாக்குதலில் 413 பேர் பலி - அமெரிக்காவை சாடும் ஹமாஸ்