ARTICLE AD BOX
இனிமே ரூ.189-க்கு.. இல்லனா ரூ.198-க்கு.. அம்பானி இறக்கிய Jio ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இனிமேல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை விட்டுவிடாதீர்கள். அதில் ஒரு திட்டம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) அந்த விலைக்கு திட்டங்கள் கிடையாது. இதுபோன்ற மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ கொடுக்கிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், லம்ப்-சம் டேட்டா/தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ், ஜியோ ஆப்கள் போன்ற சலுகைகள் விலைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம், ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ஜியோ வெப்சைட் அல்லது ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், திட்டம் மறைக்கப்பட்டிருக்கும். ஆகவே, வேல்யூ பக்கத்தில் கீழே இருக்கும் மலிவு விலை பேக் (Affordable Pack) டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
இதை செய்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.189 திட்டம் தோன்றும். அதன் பிறகு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி ரீசார்ஜ் செய்யும் இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் அந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், டேட்டா அப்படி கிடைக்காது.
ஆகவே, 28 நாட்களுக்கும் சேர்த்தே வெறும் 2 ஜிபி மட்டுமே கொடுக்கப்படும். இருப்பினும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) பயன்படுத்த கொடுக்கப்படும். இதுபோக 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் கிடைக்கிறது. இதையும் 28 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதைவிட அதிக டேட்டா சலுகைகள் பின்வரும் திட்டத்தில் இருக்கிறது.
ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முந்தைய திட்டத்தைவிட ரூ.11 அதிகமாக இருக்கிறது. ஆனால், வேலிடிட்டி 14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஏனென்றால், இதில் டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, முந்தைய திட்டத்தில் 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது.
ஆனால், இந்த திட்டத்தில் அதை நாளொன்றுக்கு பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 14 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வருகிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைவாக இருக்கிறதே அது அதிகமாக கிடைக்கும்படி ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு மற்றொரு மலிவு விலை திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 199 Prepaid Plan): இந்த திட்டம் முந்தைய திட்டத்தைவிட ரூ.1 அதிகமாக இருக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 18 நாட்களுக்கு கொடுக்கிறது. இந்த 18 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை பெறலாம். ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் கிடைக்கிறது.