இந்தியாவின் டாப் 10 நீளமான பாலங்கள்...எங்கெல்லாம் இருக்கிறது தெரியுமா?

2 days ago
ARTICLE AD BOX

நீர்வழிப் பாதைகளின் குறுக்கே, இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் போக்குவரத்திற்காக பல கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் சாலைகள், பாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் அடல் சேது, மகாத்மா காந்தி சேது, கோதாவரி நான்காவது பாலம் போன்ற பல பாலங்கள் மிகவும் நீளமானவைகள். இது போல் ஏராளமான பாலங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் இந்தியாவில் உள்ள நீளங்கள் பாலங்கள் மற்றும் அவை இணைக்கும் இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Top 10 longest bridges spanning India you must know

மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு பாலம்:

மகாராஷ்டிராவில் உள்ள பிரபலமான அடல் சேது கடல் பாலத்தை உள்ளடக்கியது, மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலம். இது உலகின் பன்னிரெண்டாவது மிக நீளமான பாலம் ஆகும். இதன் நீளம் 22 கிலோமீட்டர் தூரங்கள். மும்பையில் செவ்ரியை, நவிமும்பையுடன் இந்த பாலம் இணைக்கிறது. இந்த பாலம் மும்பை துறைமுகத்தை உள்ளடக்கியது ஆகும்.

தோலா சதியா பாலம்:

அசாம் சதியா பாலம், பூபென் ஹசாரிகா சேது என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாலம், லோஹித் ஆற்றின் குறுக்கே அசாமின் கிழக்குப் பகுதியில் உள்ள சதியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இணைத்ததன் மூலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையேயான பயண போக்குவரத்து நேரம் குறைக்கபட்டுள்ளது. இதன் நீளம் 9.15 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

திபாங் ஆற்றுப்பாலம்:

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் நதியின் மீது அமைந்துள்ள இந்த பாலம்,போம்ஜிர் மற்றும் மாலேக் பகுதிகளை இணைக்கிறது. இந்திய சீன எல்லையில் உருவாகும் பிரம்மபுத்திராவின் துணை நதியான டாலோ ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் நீளம் சுமார் 6.2 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

மகாத்மா காந்தி பாலம்:

பீகாரில் உள்ள மகாத்மா காந்தி சேது பாலம் புனித கங்கையை கடக்கும் ஒரு முக்கியமான பாலம் ஆகும். இது பிஹாரில் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாகும். இது பாட்னாவில் இருந்து ஹாஜிபூர் வரையிலும் நீண்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான எஃகு பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நீளம் சுமார் 5.75 கிலோ மீட்டர் தூரங்கள் ஆகும்.

பாந்த்ரா வொர்லி கடல் இணைப்பு :

ராஜீவ் காந்தி கடல் பாலம் என்று அழைக்கப்படும் பாந்த்ரா வொர்லி கடல்பாலம்,வொர்லியை பாந்த்ராவுடன் இணைக்கும் ஒரு கேபிள் தாங்கிய கடல் பாலம் ஆகும். இது தெற்கு மும்பையை, வடமேற்கு மும்பையுடன் இணைக்கிறது. இதன் நீளம் 5.6 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

கோதாவரி நான்காவது பாலம் :

இந்தப் பாலம் புனித கோதாவரி நதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ராஜமுந்திரி மற்றும் கோவ்வூருக்கு இடையே உள்ளது. இது சாலை பயண போக்குவரத்திற்கு உதவுகிறது. இதன் நீளம் 4.5 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

போகிபீல் பாலம் அசாம்:

போகிபீல் காட் அருகே உள்ள போகிபீல் பாலம் பிரம்மபுத்திரா நதியை கடக்கும் ஒரு ஒருங்கிணைந்த சாலை மற்றும் ரயில் பாலம் ஆகும். இது அசாமில் உள்ள திப்ருகார் மற்றும் தேமாஜி மாவட்டங்களுக்கு இடையேயான ஒரு இணைப்பு பாலம் ஆகும். இதன் நீளம் 4.94 கிலோ மீட்டர் தூரங்கள்.

விக்ரம்ஷிலா சேது பீகார்:

விக்ரம்ஷிலா சேது கங்கை நதியில் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும். இது பாகல்பூர் மற்றும் சுல்தான்கஞ்ச் இடையே அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 4.7 கிலோமீட்டர் தூரங்கள் ஆகும்.

வேம்பநாடு ரயில் நிலையம்:

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேம்பநாடு ரயில் பாலம் வேம்பநாடு ஏரியை கடந்து செல்ல உதவுகிறது. இது கேரளாவில் உள்ள மற்ற ரயில்வே நெட்வொர்க்களை இணைக்கிறது.

திகா சோன்பூர் பாலம்:

2016 ஆம் ஆண்டு திகாவிற்கும் சோன்பூருக்கும் இடையில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்ட இந்த பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை கண்காட்சி நடைபெறும் இடமாகும். இந்த பாலத்தின் நீளம் 4.5 கிலோ மீட்டர் தூரங்கள் ஆகும்.

Read more about: bridges
Read Entire Article