ARTICLE AD BOX
அம்பானிகளை ஆதரிப்பது வெட்கக்கேடு.. IND Vs PAK போட்டியின் போது Jio-வை வறுத்தெடுத்த கஸ்டமர்கள்.. ஏன்?
கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட.. அட அவ்வளவு ஏன் கிரிக்கெட் புரியாதவர்கள் கூட "என்ன இந்தியா ஜெய்ச்சிடும்ல?" என்று கேட்க வைக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேற்று நல்லபடியாக நடந்து முடிந்தது. இந்தியாவும் வெற்றி பெற்றது. எல்லோரும் ஹேப்பி; ஆனால் சிலர் மட்டும் அப்செட். அப்படி அப்செட் ஆன எல்லோருமே ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்கள் ஆவார்கள்!
நேற்று (பிப்.23) பிற்பகல், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, பல ஜியோ ஏர்ஃபைபர் பயனர்கள் செயல் இழப்பை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியை பார்க்க சிலர் உள்ளூர் நெட்வொர்க்குகளை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்த பலரும் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த சமூக ஊடகங்களின் வழியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவை கடுமையாக சாடியுள்ளனர்.

ஒரு பயனர் ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) வழியாக #INDvsPAK போட்டி தற்போது இப்போது 1 மணிநேரம் செயலிழந்துள்ளது. எனது லோக்கல் ஃபைபர் சேவையாளருக்கு நன்றி. அதன் மூலமே என்னால் போட்டியை பார்க்க முடிந்தது. நாங்கள் அம்பானிகளை ஆதரிப்பது வெட்கக்கேடானது. உண்மையில் அவர்கள் குண்டர்கள். @JioCare வெட்கமற்றது என்று பதிவிட்டுள்ளார்.
இதே போல இன்னொரு பயனர் @DisneyPlusHSP உடன் ஒரு பிரச்சனையும் இருந்தது இல்லை, ஆனால் இந்த அம்பானிகள் தான் எல்லாவற்றையும் கெடுக்கிறார்கள். முழு ஜியோ ஏர்ஃபைபர் சேவையும் செயலிழந்தது. @JioCinema வின் முட்டாள்தனமான வேலைக்காக வழக்கு தொடரப்படும் என்று பதிவிட்டு உள்ளார்.
இன்னொரு பயனர் ஜியோ ஃபைபர் பரிதாபகரமான சேவையாகும். பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அழைக்கிறேன். 24 மணி நேரத்திற்குள் எனக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள், இப்போது என்னிடம் பேசிய திரு விஷால் பிரசாத், இப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு உதவ முடியாது என்று கூறுகிறார். ஜியோ - மோசமான வாடிக்கையாளர் சேவையாகும்.
இதேபோல இன்னொரு பயனர், நான் ஜியோ ஏர்ஃபைபரை இன்ஸ்டால் செய்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு சில டெக்னீஷியன்கள் வந்து டிவைஸை மாற்றியதால் நெட் ஸ்பீட் சரியாக இல்லை. மேலும் ஜியோ சேவை குழுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த ஜியோ ஏர்ஃபைபர் செயலிழப்பான்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது, இதனால் பல பயனர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்த்து ரசிக்க முடியவில்லை. இதுகுறித்த புகார்கள் குவிந்ததால், சேவையின் இடையூறு அதிக எண்ணிக்கையிலான ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களை பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
'பீக் ஹவர்'களில் ஜியோவின் சேவையின் நம்பகத்தன்மை குறித்த கவலையை இந்த சம்பவம் மேலும் அதிகரித்துள்ளது. பயனர்கள் நிலையான இண்டர்நெட் அணுகலை இனியாவது பெறுவார்களா என்கிற கேள்வி ஜியோ நிறுவனத்தின் முன் நிற்கிறது. இதெல்லாம் ஒருபக்க இருக்க ஜியோ நிறுவனம் இதுவரை எந்த புகார்களுக்கும் பதிலளிக்கவில்லை. இருந்தாலும் கூட வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் சமூக ஊடங்களின் வழியாக தங்கள் அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஜியோ சினிமா (JioCinema) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை (Disney Plus Hotstar) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotStar) அறிமுகம் செய்யப்பட்டு நடந்த மிக முக்கியமான போட்டி இதுவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் மொத்தம் 3 வகையான சந்தா திட்டங்கள் உள்ளன: மொபைல் பிளான், சூப்பர் பிளான் மற்றும் ப்ரீமியம் பிளான். இதில் மொபைல் பிளான் தான மிகவும் மலிவான திட்டமாகும். இது ரூ.149 க்கும் மற்றும் ரூ.499 க்கும் அணுக கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் திட்டங்கள் ரூ.299 மற்றும் ரூ.899 க்கு அணுக கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியம் திட்டங்களின் ரூ.499 மற்றும் ரூ.1499 க்கும் அணுக கிடைக்கிறது.