அமைச்சர் பொன்முடி வழியில் சி.வி.சண்முகம்... பாதுகாப்பான தொகுதிக்கு மாறத் திட்டமா?

10 hours ago
ARTICLE AD BOX

Published : 19 Mar 2025 08:42 AM
Last Updated : 19 Mar 2025 08:42 AM

அமைச்சர் பொன்முடி வழியில் சி.வி.சண்முகம்... பாதுகாப்பான தொகுதிக்கு மாறத் திட்டமா?

<?php // } ?>

அமைச்சர் பொன்முடியைப் பின்பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும் 2026 தேர்தலில் பாதுகாப்பான தொகுதிக்கு இடம் மாறுகிறார் - தற்போது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். ​திக பேச்​சாள​ராக இருந்த பேராசிரியர் க.தெய்​வசி​காமணி என்​கிற பொன்​முடியை உட்​கட்சி புகைச்​சலை சமாளிப்​ப​தற்​காக 1989-ல் விழுப்​புரம் தொகு​தி​யில் நிறுத்​தி​யது திமுக தலை​மை.

அந்​தத் தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாள​ரான அப்​துல் லத்​தீபை சுமார் 22 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றார் பொன்​முடி. அடுத்த தேர்​தலில் ராஜீவ் அலை​யால் விழுப்​புரத்​தில் பொன்​முடி​யால் ஜெயிக்க முடி​யாமல் போனது. அதேசம​யம், 1996-ல் அதே விழுப்​புரத்​தில் சுமார் 41 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அதி​முக-வை வீழ்த்​தி​னார். 2001, 2006 தேர்​தல்​களி​லும் விழுப்புரத்தை தக்​க​வைத்த பொன்​முடி, 2011-ல் அதி​முக வேட்​பாளர் சி.​வி.சண்​முகத்​திடம் சுமார் 12 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தியாசத்​தில் விழுப்​புரத்​தைப் பறி​கொடுத்​தார்.

இதையடுத்து 2016 தேர்​தலில், தனது சொந்த கிரா​ம​மான டி.எடை​யாரை உள்​ளடக்​கிய திருக்​கோ​விலூர் தொகு​திக்கு பாது​காப்​பாக மாறிக் கொண்​டார் பொன்​முடி. இனி​யும் விழுப்​புரத்​தில் வன்​னிய​ரான சி.​வி.சண்​முகத்தை எதிர்த்து போட்​டி​யிட்டு ரிஸ்க் எடுக்க வேண்​டாம் என்​ப​தாலேயே பொன்​முடி இந்த முடிவை எடுத்​த​தாகச் சொல்​வார்​கள்.

தொடர்ந்து இரண்​டாவது முறை​யாக திருக்​கோ​விலூர் தொகு​தி​யில் வென்​றுள்ள பொன்​முடி, 2021 தேர்​தலில் பாஜக வேட்​பாளர் கலிவரதனை சுமார் 59 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார். ஆனால், தேர்​தலில் சுலப​மாக ஜெயிப்​ப​தற்​காக தொகு​தியை மாற்​றிக் கொண்ட பொன்​முடிக்கு விழுப்​புரத்தை விட்​டுப் போன பிறகு கட்​சிக்​குள் முன்​பிருந்த அதி​காரங்​கள் குறைந்து போனதும் மறுக்கமுடியாத உண்​மை.

ஒரு காலத்​தில் ஒன்​று​பட்ட விழுப்​புரம் மாவட்​டத்​துக்கே செய​லா​ள​ராக இருந்​தவர் பொன்​முடி. இப்​போது, துணைப் பொதுச்​செய​லா​ளர் அந்​தஸ்​தில் இருந்​தா​லும் மாவட்ட அரசி​யலில் பொன்​முடிக்கு பழைய அதி​காரங்​கள் இல்லை என்​பது தான் நிதர்​சனம். பொன்​முடி​யின் மகன் கவுதம சி​காமணி திருக்​கோ​விலூர், விக்​கிர​வாண்டி தொகு​தி​களை உள்​ளடக்​கிய விழுப்​புரம் தெற்கு மாவட்​டத்​துக்கு பொறுப்​பாள​ராக இருக்​கி​றார். அதி​லும் திருக்​கோ​விலூர் தொகுதி அமைச்​சர் எ.வ.வேலு​வின் கட்​டுப்​பாட்​டில் இருக்​கிறது.

இப்​படி​யான சூழலில், அமைச்​சர் பொன்​முடிக்கு வந்த அதே சிந்​தனை இப்​போது அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்​கும் வந்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். 2001, 2006 தேர்​தல்​களில் திண்​டிவனத்​தில் வென்ற சி.​வி.சண்​முகத்​துக்​கு, 2011, 2016 தேர்​தல்​களில் விழுப்​புரத்​தில் போட்​டி​யிட வாய்ப்​பளித்​தார் ஜெயலலி​தா. அங்​கும் வென்று காட்​டிய சண்​முகம், 2021-ல் மீண்​டும் விழுப்​புரத்​தில் களமிறங்​கி​னார்.

இவரை எப்​படி​யா​வது வீழ்த்த வேண்​டும் என கங்​கணம் கட்​டிக்​கொண்​டிருந்த திமுக தலை​மை, அதி​முக-​விலிருந்து வந்த லட்​சுமணனை விழுப்​புரத்​தில் நிறுத்​தி​யது. வன்​னிய​ரான லட்​சுமணன், சி.​வி.சண்​முகத்தை சுமார் 14 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​னார். அதே லட்​சுமணனுக்கு தற்​போது விழுப்​புரம் மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதையெல்​லாம் உள்​வாங்கி இருக்​கும் சி.​வி.சண்​முகம் இனி​யும் லட்​சுமணனுடன் மோதி ரிஸ்க் எடுக்க முடி​யாது என்​ப​தால் தனது சொந்த கிரா​ம​மான ஔவை​யார் குப்​பத்தை உள்​ளடக்​கிய மயிலம் தொகு​திக்கு மாறும் யோசனை​யில் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். தற்​போது மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருக்​கும் சண்​முகம், தனது தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் பெரும் பகு​தியை மயிலம் தொகு​திக்கே ஒதுக்கி நலத்​திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

அதி​முக-​வில் இரண்​டாம் கட்ட தலை​வர்​கள் பட்​டியலில் இருக்​கும் சி.​வி.சண்​முகம், விழுப்​புரம் மாவட்ட அதி​முக செய​லா​ள​ராக இருக்​கி​றார். மாவட்​டத் தலைநக​ரான விழுப்​புரத்தை விட்​டு​விட்டு இவரும் பாது​காப்​பான இடம் தேடி மயிலம் பக்​கம் ஒதுங்​கும் பட்​சத்​தில், தொகுதி மாறிய​தால் பொன்​முடிக்கு ஏற்​பட்ட அரசி​யல் சறுக்​கல்​களை​யும் கொஞ்​சம் அசை​போட்​டுக் கொண்​டால் நல்​லது என்​கி​றார்​கள் விழுப்​புரம் மாவட்ட ரத்​தத்​தின் ரத்​தங்​கள்​!

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article