அமெரிக்காவில் சாலை விபத்து: தெலங்கானாவை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

1 day ago
ARTICLE AD BOX

Published : 18 Mar 2025 05:21 AM
Last Updated : 18 Mar 2025 05:21 AM

அமெரிக்காவில் சாலை விபத்து: தெலங்கானாவை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கணவர் ரோஹித்துடன் விபத்தில் உயிரிழந்த அவரது மனைவி பிரகதி மற்றும் மூத்த மகன் அர்வின். அடுத்த படம்: ரோஹித்தின் தாயார் சுனிதா.
<?php // } ?>

ஹைதராபாத்: அமெரிக்​கா​வில் நடை​பெற்ற சாலை விபத்​தில் தெலங்​கானா மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறு​வன் உட்பட மூவர் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர்.

தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி மாவட்​டம், டேகுலபல்லி பகு​தியை சேர்ந்த முன்​னாள் மண்டல தலை​வர் மோகன்​ரெட்​டி. இவரது மனைவி முன்​னாள் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா தேவி. இவர்​களுக்கு 2 மகள்​கள். இதில் 2-வது மகளான பிரக​திக்​கும், சித்​திபேட்​டையை சேர்ந்த ரோஹித் என்​பவருக்​கும் திரு​மணம் நடந்​தது.

இவர்​களுக்கு 2 மகன்​கள். ரோஹித், அவரது மனைவி பிரக​தி​, ரோஹித்​தின் தாயான சுனி​தா​ அமெரிக்​கா​வில் புளோரி​டா​வில் வசித்து வந்​தனர். இந்​நிலை​யில், இந்​திய நேரப்​படி திங்​கட்​கிழமை அதி​காலை 3 மணி​யள​வில் ரோஹித், அவரது மனைவி பிரக​தி, மாமி​யார் சுனிதா மற்​றும் 2 மகன்​கள் என அனை​வரும் காரில் புளோரி​டா​வில் ஷாப்​பிங் செய்ய சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது, பின்​னால் இருந்து வந்த ஒரு டிரக் இவர்​களின் கார் மீது பயங்​கர​மாக மோதி விபத்​துக்​குள்​ளானது.

இந்த கோர விபத்​தில் பிரகதி (35), இவரது மகன் அர்​வின் (8), சுனிதா (56) ஆகிய மூவரும் சம்பவ இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ரோஹித் மற்​றும் மற்​றொரு மகன் படு​காயமடைந்​தனர். இவர்​கள் தற்​போது புளோரி​டா​வில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். விபத்து குறித்து அறிந்​ததும் இரு வீட்​டாரும் கதறி அழுதனர். உடனடி​யாக பிரக​தி​யின் பெற்​றோர் அமெரிக்கா​வுக்கு புறப்​பட்​டுள்​ளனர். இறுதி சடங்​கு​கள் புளோரி​டா​விலேயே நடக்​கிறது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article