ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 06:07 PM
Last Updated : 06 Mar 2025 06:07 PM
அடையாற்றின் கரையோரம் வசித்த 153 குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு

சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, சத்யாநகர் பகுதியில் அடையாற்றின் கரையோரம் வசித்த 153 குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடையாற்றின் கரையோரம் வசித்த குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வில், மொத்தம் 29 இடங்களில் 9,539 குடும்பங்கள் வசித்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு முதல் அந்த குடும்பங்கள் படிப்படியாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 20 பகுதிகளை சேர்ந்த 5200 பேர் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 9 பகுதிகளில் இருந்து 3,339 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும். இப்பணி பகுதியாக நேற்று அடையாற்றின் கரையோரம், சைதாப்பேட்டை, சத்யாநகரில் வசித்து வந்த 153 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்யும் பணி தொடங்கியது. இக்குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
இந்தக் குடும்பங்களுக்கு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இடமாற்று உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வாழ்வாதார உதவித்தொகையாக மாதம் ரூ.2500 என ஓராண்டுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- 3 ஆண்டுக்கு மேலாக டெண்டர் விடப்படாத 40 வருவாய் இனங்கள்: மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயம்
- தமிழிசை கைது முதல் அண்ணாமலை கண்டனம் வரை - நடந்தது என்ன?
- ரூ.4.25 கோடியில் 17 மரகத பூஞ்சோலைகள்: தமிழக வனத்துறை தகவல்
- “ராகுல் காந்திக்கு வழிகாட்ட தயாராக இருக்கிறேன்... ஆனால், அவர் விரும்பவில்லை!” - மணி சங்கர் அய்யர்